‘தொட்டனைத் தூறும் மணற்கோணி போல மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு’ என்பதற்கு இணங்க தமிழ் மொழியே தாய்மொழி என்று நின்று விடாது தற்காலத்தில் கட்டாய மொழியாக ஆங்கிலம், சிங்களம் இருந்து வருவதனைக் காணமுடிகின்றது. அவற்றிலும் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் எவ்வாறு அதிகரித்துச் செல்கிறது என்பதைக் காணலாம். குறிப்பாக கூறுவது என்றால் ஆங்கிலம் தெரியாதவன் அடுத்த ஊருக்குப் செல்ல முடியாத அளவிற்கு ஆங்கிலக் கல்வி முக்கிய இடம் பெறுகின்றது.
கட்டாய மொழியான ஆங்கில மொழியினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் இன்றும் சில கிராமங்கள் காணப்படுகின்றது. கிராமப்புற பாடசாலைகளில் இதனை அதிகமாகக் காணமுடியும். பாடசாலைக் காலத்தில் பெறப்படும் ஆங்கில அறிவானது ஒரு கட்டடத்திற்கான அத்திவாரமாகவே அமைந்து விடும். அதாவது ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்பதற்கு அமைய பாடசாலைக் காலங்களில் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆங்கில மொழியினைக் கற்க வேண்டியது அவசியம்.
ஆங்கில மொழி கற்காதவன் பிச்சை எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது எமது தேவையை பூர்த்தி செய்து வாழ்க்கைப் பாதையில் நகரவேண்டும் என்றால் எவரிடம் இருந்தாவது ஆங்கிலம் என்னும் அறிவை பிச்சை எடுக்கும் நிலையில்தான் வாழ வேண்டும் என்பது உறுதி.
‘அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்’ என்பர். பிறக்கும் போது உடலுடன் உயிர்தான் கூட வருகின்றது. பின்னர் பாடசாலைக் காலத்திலும் பிரதேச விருத்தியிலுமே அறிவு என்னும் விருத்தி பெறப்படுகின்றது. இவற்றின் ஒன்றாகவே ஆங்கில அறிவு விளங்குகின்றது. ஆங்கிலக் கல்வியானது ஆரம்பத்தில் கரும்பு நுனியை சுவைத்தாற் போல காணப்பட்டாலும் பின்னர் கரும்பின் அடிக்கு ஒப்பாகும். இது தனிமனிதன் ஒவ்வொருவரிடமும் காணப்படும் ஓர் உணர்வே…………!

0 comments:
Post a Comment